தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, [QBR2] பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக [QBR2] உமது மகிமையை வைத்திருக்கிறீர். [QBR]
2. உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, [QBR2] உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் [QBR] உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக [QBR2] வல்லமையை உறுதிப்படுத்தினீர். [QBR]
3. உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் [QBR2] அவற்றில் நீர் பதித்து வைத்த [QBR] சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி [QBR2] நான் சிந்திக்கும்போது, [QBR]
4. மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், [QBR2] மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்? [*எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?]
5. நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, [QBR2] அவர்களை [†அவர்களை அல்லது அவனை] மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். [QBR]
6. உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; [QBR2] அனைத்தையும்: [QBR]
7. எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் [QBR2] காட்டு மிருகங்களையும் [QBR]
8. ஆகாயத்துப் பறவைகளையும் [QBR2] கடல் மீன்களையும் [QBR2] கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.
9. எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, [QBR2] பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
சங்கீதம் 8:73
1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக உமது மகிமையை வைத்திருக்கிறீர். 2 உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக வல்லமையை உறுதிப்படுத்தினீர். 3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது, 4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்? *எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்? 5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை அவர்களை அல்லது அவனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். 6 உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்: 7 எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும் 8 ஆகாயத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர். 9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References