1. [QS]இறைவனே, பிற நாட்டு மக்கள் உமது உரிமைச்சொத்தின்மேல் படையெடுத்தார்கள்; [QE][QS2]அவர்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அசுத்தப்படுத்திவிட்டார்கள், [QE][QS2]அவர்கள் எருசலேமை இடித்துக் கற்குவியலாக்கிவிட்டார்கள். [QE]
2. [QS]அவர்கள் உமது பணியாளர்களின் இறந்த உடல்களை [QE][QS2]ஆகாயத்துப் பறவைகளுக்கு இரையாக்கி, [QE][QS2]உமது பரிசுத்தவான்களின் சதையை காட்டு மிருகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். [QE]
3. [QS]அவர்கள் எருசலேம் முழுவதையும் சுற்றிலும், [QE][QS2]இரத்தத்தைத் தண்ணீரைப்போல் ஊற்றிவிட்டார்கள்; [QE][QS2]அங்கு இறந்தோரைப் புதைக்க ஒருவரும் இல்லை. [QE]
4. [QS]நாங்கள் எங்கள் அயலாரின் நிந்தனைக்கும், [QE][QS2]எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாய் இருக்கிறோம். [QE][PBR]
5. [QS]யெகோவாவே, எதுவரைக்கும் எங்கள்மேல் கோபமாய் இருப்பீர்? [QE][QS2]எப்பொழுதுமே கோபமாய் இருப்பீரோ? [QE][QS2]உமது சினம் எவ்வளவு காலத்திற்கு நெருப்பைப்போல் எரியும்? [QE]
6. [QS]உம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்மேலும், [QE][QS2]உமது பெயரைச் சொல்லி வழிபடாத [QE][QS]அரசுகள் மேலும் [QE][QS2]உமது கடுங்கோபத்தை ஊற்றும். [QE]
7. [QS]ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கி, [QE][QS2]அவனுடைய சொந்த நாட்டை அழித்துப்போட்டார்கள். [QE][PBR]
8. [QS]எங்கள் முன்னோரின் பாவங்களை எங்களுக்கு விரோதமாய் நினைவில் கொள்ளாதேயும்; [QE][QS2]உமது இரக்கம் எங்களை விரைவாய் சந்திப்பதாக; [QE][QS2]ஏனெனில் நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு இருக்கிறோம். [QE]
9. [QS]எங்கள் இரட்சகராகிய இறைவனே, [QE][QS2]உமது பெயரின் மகிமையின் நிமித்தம் எங்களுக்கு உதவிசெய்யும்; [QE][QS]உமது பெயரின் நிமித்தம் [QE][QS2]எங்களை மீட்டு, எங்கள் பாவங்களை மன்னியும். [QE]
10. [QS]“அவர்களுடைய இறைவன் எங்கே?” [QE][QS2]என்று பிற நாட்டு மக்கள் ஏன் சொல்லவேண்டும்? [QE][PBR] [QS]சிந்தப்பட்ட உமது ஊழியரின் இரத்தத்திற்காக நீர் பழிவாங்குகிறீர் என்பதை, [QE][QS2]எங்கள் கண்களுக்கு முன்பாக பிற நாட்டு மக்கள் மத்தியில் தெரியும்படிச் செய்யும். [QE]
11. [QS]சிறைக் கைதிகளின் பெருமூச்சைக் கேளும்; [QE][QS2]மரணத் தீர்ப்புக்கு உள்ளானவர்களை உமது புயத்தின் பலத்தால் பாதுகாத்துக்கொள்ளும். [QE]
12. [QS]யெகோவாவே, எங்கள் அயலார் உம்மேல் வாரியெறிந்த நிந்தனையை [QE][QS2]அவர்களுடைய மடியில் ஏழுமடங்காகத் திரும்பக்கொடும். [QE]
13. [QS]அப்பொழுது உமது மக்களும் உமது நிலத்தின் செம்மறியாடுகளுமாகிய நாங்கள் [QE][QS2]என்றென்றும் உம்மைத் துதிப்போம்; [QE][QS]தலைமுறை தலைமுறையாக [QE][QS2]நாங்கள் உமது துதியைச் சொல்வோம். [QE]