1. [QS]என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; [QE][QS2]என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். [QE]
2. [QS]நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; [QE][QS2]நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன். [QE]
3. [QS]நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் [QE][QS2]எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள். [QE]
4. [QS]நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; [QE][QS2]யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், [QE][QS]அவருடைய வல்லமையையும், [QE][QS2]அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம். [QE]
5. [QS]அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, [QE][QS2]இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, [QE][QS]அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, [QE][QS2]நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். [QE]
6. [QS]அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; [QE][QS2]இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், [QE][QS2]அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். [QE]
7. [QS]அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, [QE][QS2]அவருடைய செயல்களை மறவாமல், [QE][QS2]அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். [QE]
8. [QS]அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; [QE][QS2]ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் [QE][QS]நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், [QE][QS2]அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது. [QE][PBR]
9. [QS]எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், [QE][QS2]யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்; [QE]
10. [QS]அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், [QE][QS2]அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள். [QE]
11. [QS]அவர்கள் அவருடைய செயல்களையும், [QE][QS2]அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள். [QE]
12. [QS]அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், [QE][QS2]அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார். [QE]
13. [QS]அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; [QE][QS2]அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார். [QE]
14. [QS]அவர் பகலில் மேகத்தினாலும், [QE][QS2]இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். [QE]
15. [QS]அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, [QE][QS2]கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார். [QE]
16. [QS]அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, [QE][QS2]தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார். [QE][PBR]
17. [QS]ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; [QE][QS2]மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள். [QE]
18. [QS]அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, [QE][QS2]வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள். [QE]
19. [QS]அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, [QE][QS2]“பாலைவனத்தில் விருந்தளிக்க [QE][QS2]இறைவனால் முடியுமோ? [QE]
20. [QS]ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, [QE][QS2]தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, [QE][QS2]நீரோடைகள் நிரம்பி வழிந்தன, [QE][QS]ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? [QE][QS2]தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள். [QE]
21. [QS]யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; [QE][QS2]அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; [QE][QS2]அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது. [QE]
22. [QS]ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, [QE][QS2]அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை. [QE]
23. [QS]ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; [QE][QS2]வானங்களின் கதவுகளைத் திறந்தார். [QE]
24. [QS]அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; [QE][QS2]பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். [QE]
25. [QS]இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; [QE][QS2]அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை [QE][QS2]இறைவன் அவர்களுக்கு அனுப்பினார். [QE]
26. [QS]அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; [QE][QS2]தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார். [QE]
27. [QS]அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், [QE][QS2]பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார். [QE]
28. [QS]அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், [QE][QS2]அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார். [QE]
29. [QS]அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; [QE][QS2]அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார். [QE]
30. [QS]ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், [QE][QS2]அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே, [QE]
31. [QS]இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; [QE][QS2]அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, [QE][QS2]இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார். [QE][PBR]
32. [QS]இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், [QE][QS2]அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; [QE][QS2]அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை. [QE]
33. [QS]ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், [QE][QS2]அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார். [QE]
34. [QS]இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; [QE][QS2]ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள். [QE]
35. [QS]இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், [QE][QS2]மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள். [QE]
36. [QS]ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, [QE][QS2]தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள். [QE]
37. [QS]அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; [QE][QS2]அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை. [QE]
38. [QS]ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; [QE][QS2]அவர் அவர்களை அழித்துவிடாமல் [QE][QS2]அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். [QE][QS]அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, [QE][QS2]அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. [QE]
39. [QS]அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், [QE][QS2]அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார். [QE][PBR]
40. [QS]அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; [QE][QS2]பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள். [QE]
41. [QS]அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; [QE][QS2]அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள். [QE]
42. [QS]அவர்கள் அவருடைய வல்லமையையும், [QE][QS2]ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை. [QE]
43. [QS]அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், [QE][QS2]சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார். [QE]
44. [QS]அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; [QE][QS2]அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. [QE]
45. [QS]அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. [QE][QS2]அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின. [QE]
46. [QS]அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், [QE][QS2]அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். [QE]
47. [QS]அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், [QE][QS2]அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார். [QE]
48. [QS]அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், [QE][QS2]அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார். [QE]
49. [QS]அவர் தமது கடுங்கோபத்தையும், [QE][QS2]சினத்தையும், எதிர்ப்பையும், [QE][QS2]இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார். [QE]
50. [QS]அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; [QE][QS2]அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல், [QE][QS2]கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். [QE]
51. [QS]அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் [QE][QS2]காமின் கூடாரங்களில்[* காமின் கூடாரங்களில் என்பது எகிப்தைப் பற்றி பேசும் ஒரு வழியாகும். ] அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார். [QE]
52. [QS]ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, [QE][QS2]அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே, [QE]
53. [QS]பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், [QE][QS2]அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; [QE][QS2]ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது. [QE]
54. [QS]இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, [QE][QS2]தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார். [QE]
55. [QS]அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, [QE][QS2]அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்; [QE][QS2]அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார். [QE][PBR]
56. [QS]ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, [QE][QS2]உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; [QE][QS2]அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை. [QE]
57. [QS]அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; [QE][QS2]இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள். [QE]
58. [QS]அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; [QE][QS2]அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள். [QE]
59. [QS]இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; [QE][QS2]அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார். [QE]
60. [QS]மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய [QE][QS2]சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார். [QE]
61. [QS]அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, [QE][QS2]தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். [QE]
62. [QS]அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; [QE][QS2]அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார். [QE]
63. [QS]அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; [QE][QS2]அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது. [QE]
64. [QS]அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; [QE][QS2]அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை. [QE][PBR]
65. [QS]அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், [QE][QS2]போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார். [QE]
66. [QS]அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; [QE][QS2]அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார். [QE]
67. [QS]அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; [QE][QS2]எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை. [QE]
68. [QS]ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், [QE][QS2]தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார். [QE]
69. [QS]அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், [QE][QS2]நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். [QE]
70. [QS]அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, [QE][QS2]அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார். [QE]
71. [QS]ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், [QE][QS2]தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும் [QE][QS2]மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார். [QE]
72. [QS]தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; [QE][QS2]கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான். [QE]