1. நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; [QBR2] எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன். [QBR]
2. நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; [QBR2] இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன், [QBR2] என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.
3. இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; [QBR2] நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று. [QBR]
4. நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; [QBR2] நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன். [QBR]
5. முந்தின நாட்களையும், [QBR2] கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்; [QBR]
6. நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். [QBR2] என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:
7. “யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? [QBR2] அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ? [QBR]
8. அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? [QBR2] அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ? [QBR]
9. இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? [QBR2] அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?”
10. அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், [QBR2] எனக்காக செயலாற்றுகிறது, [QBR]
11. யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; [QBR2] ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன். [QBR]
12. உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; [QBR2] உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.
13. இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; [QBR2] நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்? [QBR]
14. அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; [QBR2] நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர். [QBR]
15. உமது வல்லமையுள்ள புயத்தினால் [QBR2] யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.
16. இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, [QBR2] சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது; [QBR2] மகா ஆழங்களும் நடுங்கின. [QBR]
17. மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, [QBR2] ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன; [QBR2] உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன. [QBR]
18. உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, [QBR2] உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது; [QBR2] பூமி நடுங்கி அதிர்ந்தது. [QBR]
19. உமது பாதை கடலிலும், [QBR2] உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; [QBR2] ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.
20. மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் [QBR2] நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர். [PE]