1. [QS]நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; [QE][QS2]எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன். [QE]
2. [QS]நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; [QE][QS2]இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன், [QE][QS2]என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது. [QE][PBR]
3. [QS]இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; [QE][QS2]நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று. [QE]
4. [QS]நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; [QE][QS2]நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன். [QE]
5. [QS]முந்தின நாட்களையும், [QE][QS2]கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்; [QE]
6. [QS]நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். [QE][QS2]என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது: [QE][PBR]
7. [QS]“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? [QE][QS2]அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ? [QE]
8. [QS]அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? [QE][QS2]அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ? [QE]
9. [QS]இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? [QE][QS2]அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?” [QE][PBR]
10. [QS]அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், [QE][QS2]எனக்காக செயலாற்றுகிறது, [QE]
11. [QS]யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; [QE][QS2]ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன். [QE]
12. [QS]உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; [QE][QS2]உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன். [QE][PBR]
13. [QS]இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; [QE][QS2]நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்? [QE]
14. [QS]அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; [QE][QS2]நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர். [QE]
15. [QS]உமது வல்லமையுள்ள புயத்தினால் [QE][QS2]யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர். [QE][PBR]
16. [QS]இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, [QE][QS2]சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது; [QE][QS2]மகா ஆழங்களும் நடுங்கின. [QE]
17. [QS]மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, [QE][QS2]ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன; [QE][QS2]உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன. [QE]
18. [QS]உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, [QE][QS2]உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது; [QE][QS2]பூமி நடுங்கி அதிர்ந்தது. [QE]
19. [QS]உமது பாதை கடலிலும், [QE][QS2]உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; [QE][QS2]ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை. [QE][PBR]
20. [QS]மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் [QE][QS2]நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர். [QE]