1. [QS]யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; [QE][QS2]இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது. [QE]
2. [QS]அவருடைய கூடாரம் சாலேமில்[* சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம். ] இருக்கிறது; [QE][QS2]அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது. [QE]
3. [QS]அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், [QE][QS2]கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார். [QE][PBR]
4. [QS]நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; [QE][QS2]வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர். [QE]
5. [QS]வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, [QE][QS2]அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; [QE][QS]போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை [QE][QS2]உயர்த்த முடியாமலிருக்கிறான். [QE]
6. [QS]யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் [QE][QS2]குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன. [QE][PBR]
7. [QS]நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; [QE][QS2]நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்? [QE]
8. [QS]நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; [QE][QS2]பூமி பயந்து அமைதியாய் இருந்தது. [QE]
9. [QS]இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக [QE][QS2]நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர். [QE]
10. [QS]நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் [QE][QS2]உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; [QE][QS2]உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர். [QE][PBR]
11. [QS]உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, [QE][QS2]அவைகளை நிறைவேற்றுங்கள். [QE][QS]அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான [QE][QS2]அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும். [QE]
12. [QS]அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; [QE][QS2]பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள். [QE]