தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; [QBR2] உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; [QBR2] மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2. இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, [QBR2] நீதியாய் நியாயந்தீர்பேன். [QBR]
3. பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; [QBR2] நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன். [QBR]
4. அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், [QBR2] கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார். [QBR]
5. உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; [QBR2] தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ”
6. கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, [QBR2] அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. [QBR]
7. ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: [QBR2] அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார். [QBR]
8. யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் [QBR2] காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; [QBR] அவர் அதை ஊற்றுகிறார்; [QBR2] பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
9. நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; [QBR2] நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QBR]
10. “கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; [QBR2] ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” [QBR2] என்று இறைவன் சொல்கிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 75 / 150
சங்கீதம் 75:61
1 இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள். 2 இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன். 3 பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன். 4 அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார். 5 உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ” 6 கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. 7 ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார். 8 யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள். 9 நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன். 10 “கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 75 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References