1. இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்? [QBR2] உமது கோபம் உமது மேய்ச்சல் நிலத்தின் செம்மறியாடுகளுக்கு விரோதமாக ஏன் புகைகிறது? [QBR]
2. நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும், [QBR2] நீர் மீட்டுக்கொண்ட உமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் நினைவிற்கொள்ளும்; [QBR2] உமது தங்குமிடமான சீயோன் மலையையும் நினைவிற்கொள்ளும். [QBR]
3. என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்; [QBR2] எதிரி பரிசுத்த இடத்திற்குள் அனைத்தையும் பாழாக்கிவிட்டான்.
4. நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்; [QBR2] அவர்கள் தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள். [QBR]
5. அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு [QBR2] கோடாரிகளைக் கையாளும் மனிதரைப்போல் அவர்கள் நடந்துகொண்டார்கள். [QBR]
6. அவர்கள் தங்கள் கோடாரிகளாலும், [QBR2] கைக்கோடரிகளாலும் சித்திரவேலைகள் எல்லாவற்றையும் அழித்தார்கள். [QBR]
7. அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்; [QBR2] அவர்கள் உமது பெயருக்குரிய தங்குமிடத்தை அசுத்தமாக்கினார்கள். [QBR]
8. அவர்கள் தங்கள் இருதயங்களில், [QBR2] “நாங்கள் அவர்களை அடியோடு அழித்துவிடுவோம்!” என்றார்கள்; [QBR2] நாட்டில் இறைவனை வழிபட்ட எல்லா இடங்களையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள்.
9. எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை; [QBR2] இறைவாக்கினரும் இல்லை; [QBR2] இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் எங்களில் யாருக்கும் தெரியாது. [QBR]
10. இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்? [QBR2] எதிரி உமது பெயரை என்றென்றும் உதறித் தள்ளிவிடுவானோ? [QBR]
11. நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்? [QBR2] மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும்.
12. ஆனால் பூர்வகாலத்திலிருந்து இறைவனே நீரே என் அரசர்; [QBR2] அவர் பூமியின்மேல் இரட்சிப்பைச் செய்துவருகிறார்.
13. உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே; [QBR2] நீரே கடலிலுள்ள இராட்சத விலங்கின் தலைகளையும் உடைத்தீர். [QBR]
14. லிவியாதான் தலைகளை நசுக்கி, [QBR2] அதைப் பாலைவனப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுத்தவரும் நீரே. [QBR]
15. ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே; [QBR2] எப்பொழுதும் நிரம்பி வழிந்தோடும் ஆறுகளை வற்றப் பண்ணினவரும் நீரே. [QBR]
16. பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே; [QBR2] சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே. [QBR]
17. பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே; [QBR2] நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர்.
18. யெகோவாவே, பகைவன் எவ்வளவாய் உம்மை ஏளனம் செய்தான் என்பதையும், [QBR2] மூடர்கள் உமது பெயரை எப்படி நிந்தித்தார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும். [QBR]
19. உமது புறாவின் உயிரை காட்டு மிருகங்களுக்கு ஒப்புக்கொடாதிரும்; [QBR2] துன்புறுத்தப்பட்ட உமது மக்களின் வாழ்வை என்றென்றும் மறவாதிரும். [QBR]
20. உமது உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்; [QBR2] ஏனெனில் வன்முறையின் இருப்பிடங்கள் நாட்டின் இருண்ட பகுதிகளை நிரப்புகின்றன. [QBR]
21. ஒடுக்கப்பட்டவர்கள் அவமானத்துடன் பின்னடைய விடாதிரும்; [QBR2] ஏழைகளும் எளியவர்களும் உமது பெயரைத் துதிப்பார்களாக. [QBR]
22. இறைவனே, எழுந்தருளும்; உமது சார்பாக நீரே வாதாடும்; [QBR2] நாள்தோறும் மூடர்கள் உம்மை எவ்வளவாய் நிந்திக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளும். [QBR]
23. உமது விரோதிகளின் கூக்குரலையும், [QBR2] தொடர்ந்தெழும் உமது பகைவரின் ஆரவாரத்தையும் அசட்டை பண்ணாதிரும். [PE]