1. {சங்கீதம் 73–89 } [QS] [PS]*ஆசாபின் சங்கீதம். *[PE] நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு, [QE][QS2]இறைவன் நல்லவராயிருக்கிறார். [QE][PBR]
2. [QS]ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி, [QE][QS2]என் காலடிகள் இடறி விழப்போனேன். [QE]
3. [QS]பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; [QE][QS2]கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன். [QE][PBR]
4. [QS]அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; [QE][QS2]அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன. [QE]
5. [QS]அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; [QE][QS2]மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை. [QE]
6. [QS]ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; [QE][QS2]அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள். [QE]
7. [QS]அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது; [QE][QS2]அவர்கள் மனதிலிருந்து எழும் தீமையான எண்ணங்களுக்கு அளவேயில்லை. [QE]
8. [QS]அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்; [QE][QS2]அகங்காரத்தில் ஒடுக்கப்போவதாகப் பயமுறுத்துகிறார்கள். [QE]
9. [QS]அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; [QE][QS2]அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது. [QE]
10. [QS]ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி, [QE][QS2]அவர்களின் சொற்களைத் தண்ணீரைப்போல் குடிக்கிறார்கள். [QE]
11. [QS]அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்? [QE][QS2]மகா உன்னதமானவருக்கு இவற்றைப் பற்றிய அறிவு உண்டோ?” என்கிறார்கள். [QE][PBR]
12. [QS]கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும், [QE][QS2]செல்வத்தினால் பெருகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். [QE][PBR]
13. [QS]உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்; [QE][QS2]வீணாகவே குற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவிக் கொண்டேன். [QE]
14. [QS]நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்; [QE][QS2]காலைதோறும் நான் கண்டிக்கப்பட்டேன். [QE][PBR]
15. [QS]இவ்வாறு பேசியிருந்தால், [QE][QS2]நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன். [QE]
16. [QS]இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது, [QE][QS2]அது எனக்குக் கடினமாய் இருந்தது. [QE]
17. [QS]ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான், [QE][QS2]நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன். [QE][PBR]
18. [QS]நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான நிலத்தில் நிறுத்துகிறீர்; [QE][QS2]நீர் அவர்களை சேதமடைந்து போகவிடுகிறீர். [QE]
19. [QS]அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; [QE][QS2]திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்! [QE]
20. [QS]விழித்தெழுகிறவனின் கனவு கலைவதுபோல், [QE][QS2]யெகோவாவே, நீர் எழும்பும்போது, [QE][QS2]அவர்களை கற்பனைக் காட்சியென்று இகழ்வீர். [QE][PBR]
21. [QS]என் இருதயம் கசந்தது, [QE][QS2]என் உள்ளம் குத்தப்பட்டது. [QE]
22. [QS]நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; [QE][QS2]நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன். [QE][PBR]
23. [QS]ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; [QE][QS2]நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர். [QE]
24. [QS]நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; [QE][QS2]பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர். [QE]
25. [QS]பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு? [QE][QS2]பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை. [QE]
26. [QS]என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; [QE][QS2]ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் [QE][QS2]எனக்குரியவருமாய் இருக்கிறார். [QE][PBR]
27. [QS]உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; [QE][QS2]உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர். [QE]
28. [QS]ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்; [QE][QS2]ஆண்டவராகிய யெகோவாவை நான் என் புகலிடமாக்கிக் கொண்டேன்; [QE][QS2]உமது செயல்களையெல்லாம் நான் விவரிப்பேன். [QE]