1. [QS]இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் [QE][QS2]இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும். [QE]
2. [QS]அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், [QE][QS2]துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார். [QE][PBR]
3. [QS]மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், [QE][QS2]குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும். [QE]
4. [QS]மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, [QE][QS2]ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; [QE][QS2]ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும். [QE]
5. [QS]சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், [QE][QS2]தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். [QE]
6. [QS]அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், [QE][QS2]பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் [QE][QS2]அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும். [QE]
7. [QS]அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; [QE][QS2]சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். [QE][PBR]
8. [QS]ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், [QE][QS2]நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும். [QE]
9. [QS]பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; [QE][QS2]அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள். [QE]
10. [QS]தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் [QE][QS2]அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; [QE][QS]ஷேபாவும், சேபாவின் அரசர்களும் [QE][QS2]அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும். [QE]
11. [QS]எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; [QE][QS2]எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும். [QE][PBR]
12. [QS]ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் [QE][QS2]உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார். [QE]
13. [QS]பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, [QE][QS2]எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். [QE]
14. [QS]அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; [QE][QS2]ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும். [QE][PBR]
15. [QS]அவர் நீடித்து வாழ்வாராக! [QE][QS2]சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக; [QE][QS]மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி, [QE][QS2]நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக. [QE]
16. [QS]நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்; [QE][QS2]குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்; [QE][QS]அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்; [QE][QS2]அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக. [QE]
17. [QS]அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக; [QE][QS2]சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக. [QE][PBR] [QS]எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்; [QE][QS2]அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள். [QE][PBR] [PBR]
18. [QS]இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; [QE][QS2]அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார். [QE]
19. [QS]அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; [QE][QS2]பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக. [QE][QCS]ஆமென், ஆமென். [QCE][PBR] [PBR]
20. [QS]ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன. [QE]