தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் [QBR2] இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும். [QBR]
2. அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், [QBR2] துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார்.
3. மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், [QBR2] குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும். [QBR]
4. மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, [QBR2] ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; [QBR2] ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும். [QBR]
5. சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், [QBR2] தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். [QBR]
6. அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், [QBR2] பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் [QBR2] அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும். [QBR]
7. அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; [QBR2] சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8. ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், [QBR2] நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும். [QBR]
9. பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; [QBR2] அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள். [QBR]
10. தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் [QBR2] அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; [QBR] ஷேபாவும், சேபாவின் அரசர்களும் [QBR2] அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும். [QBR]
11. எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; [QBR2] எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும்.
12. ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் [QBR2] உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார். [QBR]
13. பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, [QBR2] எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். [QBR]
14. அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; [QBR2] ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும்.
15. அவர் நீடித்து வாழ்வாராக! [QBR2] சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக; [QBR] மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி, [QBR2] நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக. [QBR]
16. நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்; [QBR2] குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்; [QBR] அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்; [QBR2] அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக. [QBR]
17. அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக; [QBR2] சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக. எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்; [QBR2] அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள்.
18. இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; [QBR2] அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார். [QBR]
19. அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; [QBR2] பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக. ஆமென், ஆமென்.
20. ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 72 / 150
சங்கீதம் 72:118
1 இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும். 2 அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார். 3 மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும். 4 மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும். 5 சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். 6 அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும். 7 அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 8 ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும். 9 பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள். 10 தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; ஷேபாவும், சேபாவின் அரசர்களும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும். 11 எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும். 12 ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். 14 அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும். 15 அவர் நீடித்து வாழ்வாராக! சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக; மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி, நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக. 16 நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்; குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்; அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்; அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக. 17 அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக; சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக. எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்; அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள். 18 இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக; அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார். 19 அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக. ஆமென், ஆமென். 20 ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 72 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References