1. [QS]யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; [QE][QS2]என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும். [QE]
2. [QS]உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்; [QE][QS2]உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும். [QE]
3. [QS]நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க [QE][QS2]என் புகலிடமான கன்மலையாய் இரும்; [QE][QS]நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், [QE][QS2]என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும். [QE]
4. [QS]என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்; [QE][QS2]தீமையும் கொடூரமும் நிறைந்த மனிதரின் பிடியிலிருந்தும் விடுவியும். [QE][PBR]
5. [QS]ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு; [QE][QS2]என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை. [QE]
6. [QS]நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்; [QE][QS2]என் தாயின் கருப்பையிலிருந்து என்னைப் பராமரித்தவர் நீரே; [QE][QS2]நான் என்றென்றும் உம்மைத் துதிப்பேன். [QE]
7. [QS]நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்; [QE][QS2]நீரே என் பலமுள்ள புகலிடம். [QE]
8. [QS]நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து, [QE][QS2]என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது. [QE][PBR]
9. [QS]நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்; [QE][QS2]என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதேயும். [QE]
10. [QS]ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; [QE][QS2]என்னைக் கொலைசெய்யக் காத்திருக்கிறவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள். [QE]
11. [QS]அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்; [QE][QS2]அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; [QE][QS2]அவனை விடுவிக்கிறவர் யாருமே இல்லை” என்கிறார்கள். [QE]
12. [QS]இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; [QE][QS2]என் இறைவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்; [QE]
13. [QS]என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக; [QE][QS2]எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள், [QE][QS2]ஏளனத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக. [QE][PBR]
14. [QS]நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்; [QE][QS2]நான் மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். [QE][PBR]
15. [QS]எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; [QE][QS2]உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், [QE][QS2]அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும். [QE]
16. [QS]ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; [QE][QS2]நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன். [QE]
17. [QS]இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; [QE][QS2]நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன். [QE]
18. [QS]இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் [QE][QS2]உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும் [QE][QS]நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும், [QE][QS2]என்னைக் கைவிடாதேயும். [QE][PBR]
19. [QS]பெரிய காரியங்களைச் செய்த இறைவனே, [QE][QS2]உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது; [QE][QS2]இறைவனே, உம்மைப்போல் யாருண்டு? [QE]
20. [QS]நீர் என்னை அநேக கசப்பான [QE][QS2]துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும் [QE][QS2]என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்; [QE][QS]பூமியின் ஆழங்களில் இருந்து [QE][QS2]நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர். [QE]
21. [QS]நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, [QE][QS2]மீண்டும் என்னைத் தேற்றுவீர். [QE][PBR]
22. [QS]என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி [QE][QS2]வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; [QE][QS]இஸ்ரயேலின் பரிசுத்தரே, [QE][QS2]யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன். [QE]
23. [QS]உம்மால் மீட்கப்பட்ட நான் [QE][QS2]உமக்குத் துதிபாடும்போது, [QE][QS2]என் உதடுகளும் கம்பீரித்து மகிழும். [QE]
24. [QS]என் நாவு நாள்முழுவதும் [QE][QS2]உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்; [QE][QS]ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள் [QE][QS2]வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள். [QE]