1. [QS]இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; [QE][QS2]யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். [QE][PBR]
2. [QS]என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் [QE][QS2]வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; [QE][QS]எனது அழிவை விரும்புகிற யாவரும் [QE][QS2]அவமானமடைந்து திரும்புவார்களாக. [QE]
3. [QS]என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், [QE][QS2]அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக. [QE]
4. [QS]ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் [QE][QS2]உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; [QE][QS]உமது இரட்சிப்பை விரும்புவோர், [QE][QS2]“இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக. [QE][PBR]
5. [QS]நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; [QE][QS2]இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். [QE][QS]நீரே என் துணை, நீரே என் மீட்பர்; [QE][QS2]யெகோவாவே, தாமதியாதேயும். [QE]