1. என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; [QBR2] என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். [QBR]
2. இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, [QBR2] என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள்.
3. என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து [QBR2] என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், [QBR]
4. என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், [QBR2] அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், [QBR]
5. அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; [QBR2] அவன் என்னைத் தரையில் தள்ளி, [QBR2] உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.
6. யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; [QBR2] என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். [QBR2] என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். [QBR]
7. எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து [QBR2] நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். [QBR2]
8. யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். [QBR] யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; [QBR2] மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். [QBR]
9. சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற [QBR2] நீதியுள்ள இறைவனே, [QBR] கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; [QBR2] நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும்.
10. மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; [QBR2] இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். [QBR]
11. இறைவன் நீதியுள்ள நீதிபதி; [QBR2] அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். [QBR]
12. கொடியவன் மனம் மாறாவிட்டால், [QBR2] இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; [QBR2] அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். [QBR]
13. அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; [QBR2] எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார்.
14. தீமையினால் நிறைந்தவர்களோ [QBR2] பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். [QBR]
15. மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, [QBR2] தாங்களே அதற்குள் விழுகிறார்கள். [QBR]
16. அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; [QBR2] அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது.
17. யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; [QBR2] மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன். [PE]