தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; [QE][QS2]என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். [QE]
2. [QS]இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, [QE][QS2]என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். [QE][PBR]
3. [QS]என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து [QE][QS2]என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், [QE]
4. [QS]என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், [QE][QS2]அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், [QE]
5. [QS]அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; [QE][QS2]அவன் என்னைத் தரையில் தள்ளி, [QE][QS2]உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும். [QE][PBR]
6. [QS]யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; [QE][QS2]என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். [QE][QS2]என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். [QE]
7. [QS]எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து [QE][QS2]நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். [QE]
[QS2]8. யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். [QE][QS]யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; [QE][QS2]மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். [QE]
9. [QS]சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற [QE][QS2]நீதியுள்ள இறைவனே, [QE][QS]கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; [QE][QS2]நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். [QE][PBR]
10. [QS]மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; [QE][QS2]இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். [QE]
11. [QS]இறைவன் நீதியுள்ள நீதிபதி; [QE][QS2]அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். [QE]
12. [QS]கொடியவன் மனம் மாறாவிட்டால், [QE][QS2]இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; [QE][QS2]அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். [QE]
13. [QS]அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; [QE][QS2]எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். [QE][PBR]
14. [QS]தீமையினால் நிறைந்தவர்களோ [QE][QS2]பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். [QE]
15. [QS]மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, [QE][QS2]தாங்களே அதற்குள் விழுகிறார்கள். [QE]
16. [QS]அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; [QE][QS2]அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. [QE][PBR]
17. [QS]யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; [QE][QS2]மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 150
1 என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். 2 இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். 3 என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், 4 என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், 5 அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; அவன் என்னைத் தரையில் தள்ளி, உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும். 6 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். 7 எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். 8 யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். 9 சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற நீதியுள்ள இறைவனே, கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். 10 மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். 11 இறைவன் நீதியுள்ள நீதிபதி; அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். 12 கொடியவன் மனம் மாறாவிட்டால், இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். 13 அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். 14 தீமையினால் நிறைந்தவர்களோ பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். 15 மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, தாங்களே அதற்குள் விழுகிறார்கள். 16 அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. 17 யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References