1. இறைவனே, என்னைக் காப்பாற்றும்; [QBR2] வெள்ளம் என் கழுத்துமட்டும் வந்துவிட்டது. [QBR]
2. கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்; [QBR2] ஆழமான வெள்ளத்தில் [QBR] நான் அகப்பட்டு விட்டேன்; [QBR2] வெள்ளம் என்னை மூடுகிறது. [QBR]
3. சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்; [QBR2] என் தொண்டையும் வறண்டுபோயிற்று; [QBR] என் இறைவனைத் தேடி [QBR2] என் கண்கள் மங்கிப்போயின. [QBR]
4. காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள் [QBR2] என் தலைமுடியைவிட அதிகமாய் இருக்கிறார்கள்; [QBR] அநேகர் காரணமில்லாமல் எனக்குப் பகைவர்களாய் இருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் என்னை அழிக்கத் தேடுகிறார்கள். [QBR] நான் திருடாததைத் திருப்பிக் கொடுக்க [QBR2] கட்டாயப்படுத்தப்படுகிறேன்.
5. இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்; [QBR2] என் குற்றம் உமக்கு மறைக்கப்பட்டிருக்கவில்லை.
6. சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே, [QBR2] உமக்காகக் காத்திருக்கிறவர்கள் [QBR2] என் நிமித்தம் அவமானம் அடையாதிருப்பார்களாக; [QBR] இஸ்ரயேலின் இறைவனே, [QBR2] உம்மைத் தேடுகிறவர்கள் [QBR2] என் நிமித்தம் வெட்கம் அடையாதிருப்பார்களாக. [QBR]
7. உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்; [QBR2] வெட்கம் என் முகத்தை மூடியிருக்கிறது [QBR]
8. நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும் [QBR2] என் சொந்தத் தாயின் மகன்களுக்கு அறியாதவனாகவும் இருக்கிறேன். [QBR]
9. ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது; [QBR2] உம்மை இகழ்கிறவர்களின் இகழ்ச்சி என்மேல் விழுகிறது. [QBR]
10. நான் அழுது உபவாசித்தபோது, [QBR2] அவர்கள் என்னை நிந்தித்தார்கள். [QBR]
11. நான் துக்கவுடை உடுத்தும் போது, [QBR2] அவர்களுக்குப் பழமொழியானேன். [QBR]
12. நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்; [QBR2] நான் குடிகாரரின் பாடலாக இருக்கிறேன்.
13. ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே, [QBR2] நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; [QBR] இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் [QBR2] நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும். [QBR]
14. சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும், [QBR2] என்னை மூழ்கிப்போக விடாதேயும்; [QBR] என்னை வெறுக்கிறவர்களிடம் இருந்தும் [QBR2] ஆழ்கடலினின்றும் என்னை விடுவியும். [QBR]
15. வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்; [QBR2] ஆழங்கள் என்னை விழுங்க விடாதேயும்; [QBR2] சவக்குழி என்மீது தன் வாயை மூடிக்கொள்ள விடாதேயும்.
16. யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது; [QBR2] உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும். [QBR]
17. உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும், [QBR2] விரைவாய் எனக்குப் பதில் தாரும்; நான் துயரத்தில் இருக்கிறேன். [QBR]
18. என்னருகே வந்து என்னைத் தப்புவியும்; [QBR2] என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
19. என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்; [QBR2] என் பகைவர் எல்லோருமே உமக்கு முன்பாக இருக்கிறார்கள். [QBR]
20. நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால் [QBR2] நான் களைத்துப் போனேன். [QBR] நான் அனுதாபத்தைத் தேடினேன், அது கிடைக்கவில்லை; [QBR2] ஆறுதல்படுத்துகிறவர்களைத் தேடினேன், ஆனால் ஒருவரையும் நான் காணவில்லை. [QBR]
21. அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்; [QBR2] என் தாகத்துக்குக் குடிக்க எனக்கு காடியைக் கொடுத்தார்கள்.
22. அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும் [QBR2] அவர்களுடைய செல்வம் அவர்களுக்குப் பொறியாயும் இருப்பதாக. [QBR]
23. அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும், [QBR2] அவர்களுடைய முதுகுகள் என்றென்றுமாக கூனிப்போகட்டும். [QBR]
24. உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; [QBR2] உமது சினம் அவர்களைப் பின்தொடர்வதாக. [QBR]
25. அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக; [QBR2] அவர்களுடைய கூடாரங்களில் யாரும் குடியேறாதிருப்பார்களாக. [QBR]
26. ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி, [QBR2] நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள். [QBR]
27. அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்; [QBR2] அவர்கள் உமது இரட்சிப்பில் பங்குபெற இடமளியாதேயும். [QBR]
28. வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக; [QBR2] நீதிமான்களின் பெயர்ப்பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படாதிருப்பார்களாக.
29. நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்; [QBR2] இறைவனே, உமது இரட்சிப்பு என்னைப் பாதுகாப்பதாக.
30. நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, [QBR2] நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன். [QBR]
31. காணிக்கையாகக் கொடுக்கும் [QBR2] கொம்பும், விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட, [QBR2] மகிமைப்படுத்துவதே யெகோவாவுக்கு அதிக மகிழ்வைக் கொடுக்கும். [QBR]
32. இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்; [QBR2] இறைவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழ்வடைவதாக! [QBR]
33. யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; [QBR2] சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.
34. வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்; [QBR2] கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும். [QBR]
35. இறைவன் சீயோனை மீட்டு, [QBR2] யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்; [QBR] அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள். [QBR2]
36. அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; [QBR2] அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள். [PE]