1. இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; [QBR2] அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக. [QBR]
2. காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; [QBR2] நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல, [QBR2] இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக. [QBR]
3. ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து [QBR2] இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக; [QBR2] அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக.
4. இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; [QBR2] மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்; [QBR2] யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். [QBR]
5. இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் [QBR2] தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும் [QBR2] விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார். [QBR]
6. இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; [QBR2] சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்; [QBR2] கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள்.
7. இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று, [QBR2] அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில், [QBR]
8. சீனாய் மலையின் இறைவனுக்குமுன், [QBR2] இஸ்ரயேலின் இறைவனுக்குமுன் [QBR2] பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன. [QBR]
9. இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்; [QBR2] இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர். [QBR]
10. உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; [QBR2] இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர்.
11. யெகோவா வார்த்தையை அறிவித்தார்; [QBR2] அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்: [QBR]
12. “இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்; [QBR2] வீட்டிலிருந்த பெண்கள் கொள்ளைப்பொருட்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். [QBR]
13. நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும், [QBR2] வெள்ளியினால் மூடப்பட்ட புறாச்சிறகுகளையும் [QBR2] பசும்பொன்னினால் அலங்கரிக்கப்பட்ட இறகுகளையும் கண்டுபிடிப்பீர்கள்.” [QBR]
14. எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது [QBR2] சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது.
15. பாசான் மலை இறைவனுடைய மலை; [QBR2] பாசான் மலை சிகரங்களையுடைய மலை. [QBR]
16. சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்? [QBR2] அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்; [QBR2] அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார். [QBR]
17. இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், [QBR2] ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன; [QBR2] யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார். [QBR]
18. நீர் மேலே ஏறிச்சென்றபோது, [QBR2] சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்; [QBR] மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்; [QBR2] இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே.
19. தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும் [QBR2] இறைவனுமான யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். [QBR]
20. நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்; [QBR2] வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார். [QBR]
21. இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்; [QBR2] தங்கள் பாவங்களில் தொடர்கிறவர்களின் முடியுள்ள [QBR2] உச்சந்தலைகளை அவர் நொறுக்கிப்போடுவார். [QBR]
22. யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; [QBR2] நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன், [QBR]
23. அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; [QBR2] உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.”
24. என் இறைவனும் என் அரசனுமானவர், [QBR2] பரிசுத்த இடத்திற்குள் உமது ஊர்வலம் போவதை, இறைவனே அனைவரும் கண்டனர். [QBR]
25. முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்; [QBR2] அவர்களுடன் இளம்பெண்கள் தம்புராவை வாசித்துக்கொண்டு போகிறார்கள். [QBR]
26. மகா சபையில் இறைவனைத் துதியுங்கள். [QBR2] இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்; [QBR]
27. சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; [QBR2] பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், [QBR2] செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.
28. இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்; [QBR2] எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோல [QBR2] உமது பலத்தை எங்களுக்குக் காண்பியும். [QBR]
29. எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக [QBR2] அரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். [QBR]
30. நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்; [QBR2] கன்றுகளோடுள்ள காளைகள் கூட்டத்தைப் போன்ற மக்களைக் கடிந்துகொள்ளும்; [QBR] அவர்கள் வெள்ளி அன்பளிப்புகளுடன் உமக்கு முன்பாகப் பணிந்துகொள்ளட்டும்; [QBR2] யுத்தத்தில் மகிழ்கிற மக்களைச் சிதறடியும். [QBR]
31. எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்; [QBR2] எத்தியோப்பியர் இறைவனிடத்தில் தங்களை சமர்ப்பிப்பார்கள்.
32. பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்; [QBR2] யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். [QBR]
33. வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை, [QBR2] வல்லமையுள்ள சத்தத்துடன் முழங்குகிறவரைப் பாடுங்கள். [QBR]
34. இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்; [QBR2] அவருடைய மகத்துவம் இஸ்ரயேலின் மேலாக இருக்கிறது; [QBR2] அவருடைய வல்லமை ஆகாயங்களில் இருக்கிறது. [QBR]
35. இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்; [QBR2] இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார். இறைவனுக்குத் துதி உண்டாவதாக! [PE]