1. [QS]இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; [QE][QS2]அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக. [QE]
2. [QS]காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; [QE][QS2]நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல, [QE][QS2]இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக. [QE]
3. [QS]ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து [QE][QS2]இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக; [QE][QS2]அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக. [QE][PBR]
4. [QS]இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; [QE][QS2]மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்; [QE][QS2]யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். [QE]
5. [QS]இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் [QE][QS2]தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும் [QE][QS2]விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார். [QE]
6. [QS]இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; [QE][QS2]சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்; [QE][QS2]கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள். [QE][PBR]
7. [QS]இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று, [QE][QS2]அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில், [QE]
8. [QS]சீனாய் மலையின் இறைவனுக்குமுன், [QE][QS2]இஸ்ரயேலின் இறைவனுக்குமுன் [QE][QS2]பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன. [QE]
9. [QS]இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்; [QE][QS2]இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர். [QE]
10. [QS]உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; [QE][QS2]இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர். [QE][PBR]
11. [QS]யெகோவா வார்த்தையை அறிவித்தார்; [QE][QS2]அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்: [QE]
12. [QS]“இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்; [QE][QS2]வீட்டிலிருந்த பெண்கள் கொள்ளைப்பொருட்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். [QE]
13. [QS]நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும், [QE][QS2]வெள்ளியினால் மூடப்பட்ட புறாச்சிறகுகளையும் [QE][QS2]பசும்பொன்னினால் அலங்கரிக்கப்பட்ட இறகுகளையும் கண்டுபிடிப்பீர்கள்.” [QE]
14. [QS]எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது [QE][QS2]சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது. [QE][PBR]
15. [QS]பாசான் மலை இறைவனுடைய மலை; [QE][QS2]பாசான் மலை சிகரங்களையுடைய மலை. [QE]
16. [QS]சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்? [QE][QS2]அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்; [QE][QS2]அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார். [QE]
17. [QS]இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், [QE][QS2]ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன; [QE][QS2]யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார். [QE]
18. [QS]நீர் மேலே ஏறிச்சென்றபோது, [QE][QS2]சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்; [QE][QS]மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்; [QE][QS2]இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே. [QE][PBR]
19. [QS]தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும் [QE][QS2]இறைவனுமான யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். [QE]
20. [QS]நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்; [QE][QS2]வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார். [QE]
21. [QS]இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்; [QE][QS2]தங்கள் பாவங்களில் தொடர்கிறவர்களின் முடியுள்ள [QE][QS2]உச்சந்தலைகளை அவர் நொறுக்கிப்போடுவார். [QE]
22. [QS]யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; [QE][QS2]நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன், [QE]
23. [QS]அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; [QE][QS2]உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.” [QE][PBR]
24. [QS]என் இறைவனும் என் அரசனுமானவர், [QE][QS2]பரிசுத்த இடத்திற்குள் உமது ஊர்வலம் போவதை, இறைவனே அனைவரும் கண்டனர். [QE]
25. [QS]முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்; [QE][QS2]அவர்களுடன் இளம்பெண்கள் தம்புராவை வாசித்துக்கொண்டு போகிறார்கள். [QE]
26. [QS]மகா சபையில் இறைவனைத் துதியுங்கள். [QE][QS2]இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்; [QE]
27. [QS]சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; [QE][QS2]பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும், [QE][QS2]செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள். [QE][PBR]
28. [QS]இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்; [QE][QS2]எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோல [QE][QS2]உமது பலத்தை எங்களுக்குக் காண்பியும். [QE]
29. [QS]எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக [QE][QS2]அரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். [QE]
30. [QS]நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்; [QE][QS2]கன்றுகளோடுள்ள காளைகள் கூட்டத்தைப் போன்ற மக்களைக் கடிந்துகொள்ளும்; [QE][QS]அவர்கள் வெள்ளி அன்பளிப்புகளுடன் உமக்கு முன்பாகப் பணிந்துகொள்ளட்டும்; [QE][QS2]யுத்தத்தில் மகிழ்கிற மக்களைச் சிதறடியும். [QE]
31. [QS]எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்; [QE][QS2]எத்தியோப்பியர் இறைவனிடத்தில் தங்களை சமர்ப்பிப்பார்கள். [QE][PBR]
32. [QS]பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்; [QE][QS2]யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். [QE]
33. [QS]வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை, [QE][QS2]வல்லமையுள்ள சத்தத்துடன் முழங்குகிறவரைப் பாடுங்கள். [QE]
34. [QS]இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்; [QE][QS2]அவருடைய மகத்துவம் இஸ்ரயேலின் மேலாக இருக்கிறது; [QE][QS2]அவருடைய வல்லமை ஆகாயங்களில் இருக்கிறது. [QE]
35. [QS]இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்; [QE][QS2]இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார். [QE][PBR] [QS]இறைவனுக்குத் துதி உண்டாவதாக! [QE]