1. இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; [QBR2] அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக. [QBR]
2. இறைவனே, உமது வழிகள் பூமியிலும், [QBR2] உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
3. இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QBR2] எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QBR]
4. நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, [QBR2] பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், [QBR2] மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக. [QBR]
5. இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QBR2] எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6. அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; [QBR2] இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார். [QBR]
7. இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; [QBR2] ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள். [PE]