1. [QS]பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் [QE][QS2]இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! [QE]
2. [QS]அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; [QE][QS2]அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். [QE]
3. [QS]இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! [QE][QS2]உமது வல்லமை பெரிதானது; [QE][QS2]அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். [QE]
4. [QS]பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; [QE][QS2]அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், [QE][QS2]அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.” [QE][PBR]
5. [QS]இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; [QE][QS2]மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. [QE]
6. [QS]அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; [QE][QS2]மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; [QE][QS2]வாருங்கள், அவரில் களிகூருவோம். [QE]
7. [QS]அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; [QE][QS2]அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; [QE][QS2]கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். [QE][PBR]
8. [QS]எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; [QE][QS2]அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. [QE]
9. [QS]அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; [QE][QS2]நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். [QE]
10. [QS]இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; [QE][QS2]வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். [QE]
11. [QS]எங்களைச் சிறைபிடித்து, [QE][QS2]எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். [QE]
12. [QS]மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; [QE][QS2]நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், [QE][QS2]ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர். [QE][PBR]
13. [QS]நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; [QE][QS2]எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். [QE]
14. [QS]நான் துன்பத்திலிருந்தபோது [QE][QS2]என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். [QE]
15. [QS]நான் கொழுத்த மிருகங்களையும் [QE][QS2]செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; [QE][QS2]நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன். [QE][PBR]
16. [QS]இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; [QE][QS2]அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். [QE]
17. [QS]நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; [QE][QS2]அவருடைய துதி என் நாவில் இருந்தது. [QE]
18. [QS]என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், [QE][QS2]யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; [QE]
19. [QS]இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, [QE][QS2]என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். [QE]
20. [QS]என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், [QE][QS2]என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த [QE][QS2]இறைவனுக்குத் துதி உண்டாகட்டும். [QE]