தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் [QBR2] இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! [QBR]
2. அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; [QBR2] அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். [QBR]
3. இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! [QBR2] உமது வல்லமை பெரிதானது; [QBR2] அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். [QBR]
4. பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; [QBR2] அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், [QBR2] அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
5. இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; [QBR2] மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. [QBR]
6. அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; [QBR2] மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; [QBR2] வாருங்கள், அவரில் களிகூருவோம். [QBR]
7. அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; [QBR2] அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; [QBR2] கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
8. எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; [QBR2] அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. [QBR]
9. அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; [QBR2] நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். [QBR]
10. இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; [QBR2] வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். [QBR]
11. எங்களைச் சிறைபிடித்து, [QBR2] எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். [QBR]
12. மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; [QBR2] நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், [QBR2] ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
13. நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; [QBR2] எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். [QBR]
14. நான் துன்பத்திலிருந்தபோது [QBR2] என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். [QBR]
15. நான் கொழுத்த மிருகங்களையும் [QBR2] செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; [QBR2] நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
16. இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; [QBR2] அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். [QBR]
17. நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; [QBR2] அவருடைய துதி என் நாவில் இருந்தது. [QBR]
18. என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், [QBR2] யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; [QBR]
19. இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, [QBR2] என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். [QBR]
20. என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், [QBR2] என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த [QBR2] இறைவனுக்குத் துதி உண்டாகட்டும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 66 / 150
சங்கீதம் 66:1
1 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! 2 அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். 3 இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! உமது வல்லமை பெரிதானது; அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். 4 பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.” 5 இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. 6 அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; வாருங்கள், அவரில் களிகூருவோம். 7 அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். 8 எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. 9 அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். 10 இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். 11 எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். 12 மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர். 13 நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். 14 நான் துன்பத்திலிருந்தபோது என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். 15 நான் கொழுத்த மிருகங்களையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன். 16 இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 17 நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவருடைய துதி என் நாவில் இருந்தது. 18 என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; 19 இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். 20 என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 66 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References