தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; [QBR2] எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும். [QBR]
2. மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, [QBR2] மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள். [QBR]
3. நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், [QBR2] எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர். [QBR]
4. உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, [QBR2] நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QBR] நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய [QBR2] உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம்.
5. எங்கள் இரட்சகராகிய இறைவனே, [QBR2] உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் [QBR2] நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; [QBR] பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் [QBR2] தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர். [QBR]
6. நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, [QBR2] உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர். [QBR]
7. கடல்களின் இரைச்சலையும் [QBR2] அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி, [QBR2] மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர். [QBR]
8. பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் [QBR2] உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள். [QBR] விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும் [QBR2] நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர்.
9. நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; [QBR2] நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்; [QBR] மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, [QBR2] இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன; [QBR2] இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர். [QBR]
10. நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, [QBR2] மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர். [QBR]
11. வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; [QBR2] நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது. [QBR]
12. பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; [QBR2] குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன. [QBR]
13. புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; [QBR2] பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; [QBR2] அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 150
சங்கீதம் 65:9
1 இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும். 2 மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள். 3 நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர். 4 உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம். 5 எங்கள் இரட்சகராகிய இறைவனே, உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர். 6 நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர். 7 கடல்களின் இரைச்சலையும் அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி, மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர். 8 பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள். விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும் நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர். 9 நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்; மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன; இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர். 10 நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர். 11 வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது. 12 பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன. 13 புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References