1. [QS]இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; [QE][QS2]எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும். [QE]
2. [QS]மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, [QE][QS2]மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள். [QE]
3. [QS]நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், [QE][QS2]எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர். [QE]
4. [QS]உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, [QE][QS2]நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். [QE][QS]நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய [QE][QS2]உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம். [QE][PBR]
5. [QS]எங்கள் இரட்சகராகிய இறைவனே, [QE][QS2]உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் [QE][QS2]நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; [QE][QS]பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் [QE][QS2]தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர். [QE]
6. [QS]நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, [QE][QS2]உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர். [QE]
7. [QS]கடல்களின் இரைச்சலையும் [QE][QS2]அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி, [QE][QS2]மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர். [QE]
8. [QS]பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் [QE][QS2]உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள். [QE][QS]விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும் [QE][QS2]நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர். [QE][PBR]
9. [QS]நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; [QE][QS2]நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்; [QE][QS]மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, [QE][QS2]இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன; [QE][QS2]இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர். [QE]
10. [QS]நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, [QE][QS2]மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர். [QE]
11. [QS]வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; [QE][QS2]நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது. [QE]
12. [QS]பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; [QE][QS2]குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன. [QE]
13. [QS]புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; [QE][QS2]பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; [QE][QS2]அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன. [QE]