1. இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; [QBR2] பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2. கொடியவர்களின் சதியிலிருந்தும், [QBR2] ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். [QBR]
3. அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; [QBR2] தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள். [QBR]
4. அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; [QBR2] அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.
5. தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; [QBR2] தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; [QBR2] “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள். [QBR]
6. அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, [QBR2] “நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். [QBR2] நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.
7. ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; [QBR2] உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள். [QBR]
8. இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, [QBR2] அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; [QBR2] அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள். [QBR]
9. எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; [QBR2] இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, [QBR2] அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.
10. நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, [QBR2] அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; [QBR2] இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்! [PE]