1. [QS]இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; [QE][QS2]பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும். [QE][PBR]
2. [QS]கொடியவர்களின் சதியிலிருந்தும், [QE][QS2]ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். [QE]
3. [QS]அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; [QE][QS2]தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள். [QE]
4. [QS]அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள். [QE][PBR]
5. [QS]தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; [QE][QS2]தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; [QE][QS2]“நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள். [QE]
6. [QS]அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, [QE][QS2]“நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். [QE][QS2]நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை. [QE][PBR]
7. [QS]ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; [QE][QS2]உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள். [QE]
8. [QS]இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, [QE][QS2]அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; [QE][QS2]அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள். [QE]
9. [QS]எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; [QE][QS2]இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, [QE][QS2]அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள். [QE][PBR]
10. [QS]நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, [QE][QS2]அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; [QE][QS2]இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்! [QE]