1. [QS]இறைவனே, நீரே என் இறைவன், [QE][QS2]நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்; [QE][QS]தண்ணீரில்லாமல் வறண்டதும், [QE][QS2]காய்ந்ததுமான நிலத்திலே [QE][QS]என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, [QE][QS2]என் உடலோ உமக்காக ஏங்குகிறது. [QE][PBR]
2. [QS]பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; [QE][QS2]உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன். [QE]
3. [QS]உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது; [QE][QS2]ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும். [QE]
4. [QS]நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்; [QE][QS2]ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன். [QE]
5. [QS]அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்; [QE][QS2]என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும். [QE][PBR]
6. [QS]என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்; [QE][QS2]இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன். [QE]
7. [QS]நீரே என் உதவியாயிருப்பதால், [QE][QS2]உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன். [QE]
8. [QS]நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்; [QE][QS2]உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. [QE][PBR]
9. [QS]என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் [QE][QS2]பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள். [QE]
10. [QS]அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; [QE][QS2]நரிகளுக்கு இரையாவார்கள். [QE][PBR]
11. [QS]ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்; [QE][QS2]இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்; [QE][QS2]பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும். [QE]