1. [QS]என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; [QE][QS2]என் இரட்சிப்பு அவரால் வருகிறது. [QE]
2. [QS]அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்; [QE][QS2]நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன். [QE][PBR]
3. [QS]எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்? [QE][QS2]நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா? [QE][QS2]நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன். [QE]
4. [QS]என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு [QE][QS2]அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள், [QE][QS2]அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; [QE][QS]அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள், [QE][QS2]ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள். [QE][PBR]
5. [QS]ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; [QE][QS2]என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. [QE]
6. [QS]அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் [QE][QS2]என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன். [QE]
7. [QS]என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; [QE][QS2]இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார். [QE]
8. [QS]மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; [QE][QS2]உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; [QE][QS2]இறைவனே நமது புகலிடம். [QE][PBR]
9. [QS]கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே, [QE][QS2]உயர்குடி மனிதர் வெறும் பொய்யே; [QE][QS]தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை; [QE][QS2]அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள். [QE]
10. [QS]பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே; [QE][QS2]களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே; [QE][QS]உனது செல்வங்கள் அதிகரித்தாலும், [QE][QS2]உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே. [QE][PBR]
11. [QS]இறைவன் ஒருமுறை பேசினார், [QE][QS2]நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: [QE][QS]“இறைவனே, வல்லமை உமக்கே உரியது, [QE]
[QS2]12. ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”; [QE][QS]நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும் [QE][QS2]அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.” [QE]