1. என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; [QBR2] என் இரட்சிப்பு அவரால் வருகிறது. [QBR]
2. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்; [QBR2] நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்.
3. எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்? [QBR2] நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா? [QBR2] நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன். [QBR]
4. என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு [QBR2] அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள், [QBR2] அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; [QBR] அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள், [QBR2] ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள்.
5. ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; [QBR2] என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. [QBR]
6. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் [QBR2] என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன். [QBR]
7. என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; [QBR2] இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார். [QBR]
8. மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; [QBR2] உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; [QBR2] இறைவனே நமது புகலிடம்.
9. கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே, [QBR2] உயர்குடி மனிதர் வெறும் பொய்யே; [QBR] தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை; [QBR2] அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள். [QBR]
10. பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே; [QBR2] களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே; [QBR] உனது செல்வங்கள் அதிகரித்தாலும், [QBR2] உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே.
11. இறைவன் ஒருமுறை பேசினார், [QBR2] நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்: [QBR] “இறைவனே, வல்லமை உமக்கே உரியது, [QBR2]
12. ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”; [QBR] நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும் [QBR2] அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.” [PE]