1. [QS]என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், [QE][QS2]என் மன்றாட்டுக்குச் செவிகொடும். [QE][PBR]
2. [QS]பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; [QE][QS2]என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும். [QE]
3. [QS]நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; [QE][QS2]பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர். [QE][PBR]
4. [QS]நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; [QE][QS2]உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன். [QE]
5. [QS]இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; [QE][QS2]உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை [QE][QS2]நீர் எனக்குத் தந்திருக்கிறீர். [QE][PBR]
6. [QS]அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; [QE][QS2]அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும். [QE]
7. [QS]இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; [QE][QS2]அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும் [QE][QS2]உண்மையையும் நியமித்தருளும். [QE][PBR]
8. [QS]அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; [QE][QS2]நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். [QE]