தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; [QBR2] நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும். [QBR]
2. நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; [QBR2] அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும். [QBR]
3. கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; [QBR2] தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர். [QBR]
4. ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள், [QBR2] வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர்.
5. நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, [QBR2] உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். [QBR]
6. இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: [QBR2] “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; [QBR2] சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். [QBR]
7. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; [QBR2] எப்பிராயீம் என் தலைக்கவசம், [QBR2] யூதா என் செங்கோல். [QBR]
8. மோவாப் என் கழுவும் பாத்திரம், [QBR2] நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; [QBR2] நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
9. அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? [QBR2] யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? [QBR]
10. இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், [QBR2] எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? [QBR]
11. பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; [QBR2] ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. [QBR]
12. இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; [QBR2] அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 60 / 150
சங்கீதம் 60:35
1 இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும். 2 நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும். 3 கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர். 4 ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள், வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர். 5 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். 6 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். 7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல். 8 மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” 9 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? 10 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? 11 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. 12 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 60 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References