1. [QS]இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; [QE][QS2]நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும். [QE]
2. [QS]நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; [QE][QS2]அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும். [QE]
3. [QS]கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; [QE][QS2]தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர். [QE]
4. [QS]ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள், [QE][QS2]வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர். [QE][PBR]
5. [QS]நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, [QE][QS2]உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும். [QE]
6. [QS]இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: [QE][QS2]“நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; [QE][QS2]சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன். [QE]
7. [QS]கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; [QE][QS2]எப்பிராயீம் என் தலைக்கவசம், [QE][QS2]யூதா என் செங்கோல். [QE]
8. [QS]மோவாப் என் கழுவும் பாத்திரம், [QE][QS2]நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; [QE][QS2]நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.” [QE][PBR]
9. [QS]அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? [QE][QS2]யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்? [QE]
10. [QS]இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், [QE][QS2]எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா? [QE]
11. [QS]பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; [QE][QS2]ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது. [QE]
12. [QS]இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; [QE][QS2]அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார். [QE]