1. [QS]யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்; [QE][QS2]உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்; [QE]
2. [QS]யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; [QE][QS2]யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும். [QE]
3. [QS]என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. [QE][QS2]எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு? [QE][PBR]
4. [QS]யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; [QE][QS2]உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும். [QE]
5. [QS]இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. [QE][QS2]பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? [QE][PBR]
6. [QS]நான் கலங்கியே இளைத்துப் போனேன். [QE][PBR] [QS]இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி, [QE][QS2]நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன். [QE]
7. [QS]என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; [QE][QS2]என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன. [QE][PBR]
8. [QS]அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; [QE][QS2]ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார். [QE]
9. [QS]இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; [QE][QS2]யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார். [QE]
10. [QS]என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; [QE][QS2]அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள். [QE]