தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; [QBR2] எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். [QBR]
2. தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; [QBR2] என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3. அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! [QBR2] யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க, [QBR2] சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள். [QBR]
4. நான் ஒரு தவறும் செய்யவில்லை; [QBR2] இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். [QBR2] எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்! [QBR]
5. சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, [QBR2] இஸ்ரயேலின் இறைவனே, [QBR] இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்; [QBR2] கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும்.
6. மாலையிலே அவர்கள் [QBR2] நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; [QBR2] நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். [QBR]
7. அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; [QBR2] அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை, [QBR2] அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள். [QBR]
8. ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; [QBR2] அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
9. நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; [QBR2] இறைவனே, நீரே என் கோட்டை, [QBR2]
10. நான் சார்ந்திருக்கும் இறைவன். தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார். [QBR2] என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார். [QBR]
11. எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; [QBR2] அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள். [QBR] உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி, [QBR2] அவர்களைத் தாழ்த்திவிடும். [QBR]
12. அவர்களுடைய உதடுகளின் பேச்சு, [QBR2] அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; [QBR2] அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், [QBR] அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக. [QBR2]
13. உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; [QBR2] அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும். [QBR] அப்பொழுது இறைவன், [QBR2] யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று [QBR2] பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.
14. மாலையிலே அவர்கள் [QBR2] நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; [QBR2] நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். [QBR]
15. உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; [QBR2] திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள். [QBR]
16. ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; [QBR2] காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; [QBR] ஏனெனில் நீரே எனது கோட்டையும் [QBR2] துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
17. என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; [QBR2] இறைவனே, நீரே என் கோட்டையும், [QBR2] என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 59 / 150
சங்கீதம் 59:122
1 இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். 2 தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 3 அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க, சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள். 4 நான் ஒரு தவறும் செய்யவில்லை; இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்! 5 சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்; கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும். 6 மாலையிலே அவர்கள் நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். 7 அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை, அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள். 8 ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர். 9 நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; இறைவனே, நீரே என் கோட்டை, 10 நான் சார்ந்திருக்கும் இறைவன். தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார். என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார். 11 எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள். உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி, அவர்களைத் தாழ்த்திவிடும். 12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு, அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக. 13 உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும். அப்பொழுது இறைவன், யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். 14 மாலையிலே அவர்கள் நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். 15 உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள். 16 ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; ஏனெனில் நீரே எனது கோட்டையும் துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர். 17 என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; இறைவனே, நீரே என் கோட்டையும், என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 59 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References