1. [QS]இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; [QE][QS2]எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும். [QE]
2. [QS]தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்; [QE][QS2]என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். [QE][PBR]
3. [QS]அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்! [QE][QS2]யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க, [QE][QS2]சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள். [QE]
4. [QS]நான் ஒரு தவறும் செய்யவில்லை; [QE][QS2]இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். [QE][QS2]எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்! [QE]
5. [QS]சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]இஸ்ரயேலின் இறைவனே, [QE][QS]இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்; [QE][QS2]கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும். [QE][PBR]
6. [QS]மாலையிலே அவர்கள் [QE][QS2]நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; [QE][QS2]நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். [QE]
7. [QS]அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்; [QE][QS2]அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை, [QE][QS2]அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள். [QE]
8. [QS]ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; [QE][QS2]அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர். [QE][PBR]
9. [QS]நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; [QE][QS2]இறைவனே, நீரே என் கோட்டை, [QE]
[QS2]10. நான் சார்ந்திருக்கும் இறைவன். [QE][PBR] [QS]தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார். [QE][QS2]என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார். [QE]
11. [QS]எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்; [QE][QS2]அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள். [QE][QS]உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி, [QE][QS2]அவர்களைத் தாழ்த்திவிடும். [QE]
12. [QS]அவர்களுடைய உதடுகளின் பேச்சு, [QE][QS2]அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; [QE][QS2]அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், [QE][QS]அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக. [QE]
[QS2]13. உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்; [QE][QS2]அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும். [QE][QS]அப்பொழுது இறைவன், [QE][QS2]யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று [QE][QS2]பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். [QE][PBR]
14. [QS]மாலையிலே அவர்கள் [QE][QS2]நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; [QE][QS2]நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள். [QE]
15. [QS]உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்; [QE][QS2]திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள். [QE]
16. [QS]ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; [QE][QS2]காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; [QE][QS]ஏனெனில் நீரே எனது கோட்டையும் [QE][QS2]துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர். [QE][PBR]
17. [QS]என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; [QE][QS2]இறைவனே, நீரே என் கோட்டையும், [QE][QS2]என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர். [QE]