தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், [QE][QS2]என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. [QE][QS]பேரழிவு கடந்து செல்லுமளவும், [QE][QS2]நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன். [QE][PBR]
2. [QS]எனக்காக யாவையும் செய்து முடிக்கும், [QE][QS2]மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன். [QE]
3. [QS]அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், [QE][QS2]என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்; [QE][QS2]இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார். [QE][PBR]
4. [QS]நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; [QE][QS2]என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்; [QE][QS]அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது; [QE][QS2]அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள். [QE][PBR]
5. [QS]இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; [QE][QS2]உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. [QE][PBR]
6. [QS]என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; [QE][QS2]துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். [QE][QS]அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; [QE][QS2]அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள். [QE][PBR]
7. [QS]என் இருதயம் உறுதியாயிருக்கிறது, [QE][QS2]இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; [QE][QS2]நான் இசையமைத்துப் பாடுவேன். [QE]
8. [QS]என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! [QE][QS2]யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! [QE][QS2]நான் அதிகாலையில் விழித்தெழுவேன். [QE][PBR]
9. [QS]ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; [QE][QS2]மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். [QE]
10. [QS]ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; [QE][QS2]உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. [QE][PBR]
11. [QS]இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; [QE][QS2]உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 150
1 என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. பேரழிவு கடந்து செல்லுமளவும், நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன். 2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும், மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன். 3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்; இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார். 4 நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்; அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது; அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள். 5 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. 6 என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள். 7 என் இருதயம் உறுதியாயிருக்கிறது, இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் இசையமைத்துப் பாடுவேன். 8 என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! நான் அதிகாலையில் விழித்தெழுவேன். 9 ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். 10 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. 11 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References