தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், [QBR2] என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. [QBR] பேரழிவு கடந்து செல்லுமளவும், [QBR2] நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன்.
2. எனக்காக யாவையும் செய்து முடிக்கும், [QBR2] மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன். [QBR]
3. அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், [QBR2] என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்; [QBR2] இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார்.
4. நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; [QBR2] என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்; [QBR] அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது; [QBR2] அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள்.
5. இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; [QBR2] உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
6. என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; [QBR2] துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். [QBR] அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; [QBR2] அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள்.
7. என் இருதயம் உறுதியாயிருக்கிறது, [QBR2] இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; [QBR2] நான் இசையமைத்துப் பாடுவேன். [QBR]
8. என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! [QBR2] யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! [QBR2] நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.
9. ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; [QBR2] மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். [QBR]
10. ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; [QBR2] உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
11. இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; [QBR2] உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 150
சங்கீதம் 57:140
1 என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், என் ஆத்துமா உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறது. பேரழிவு கடந்து செல்லுமளவும், நான் உமது சிறகுகளின் நிழலில் புகலிடம் கொள்வேன். 2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும், மகா உன்னதமானவரான இறைவனை நோக்கி நான் கூப்பிடுவேன். 3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார், என்னைத் தாக்குகிறவர்களைக் கடிந்துகொள்வார்; இறைவன் தமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் அனுப்புவார். 4 நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்; என்னை எதிர்க்கும் மனுமக்களின் மத்தியில் இருக்கிறேன்; அவர்களுடைய பற்கள் ஈட்டிகளும் அம்புகளுமாய் இருக்கிறது; அவர்களின் நாவுகளோ கூர்மையான வாள்கள். 5 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக. 6 என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்; துயரத்தினால் நான் சோர்ந்து போனேன். அவர்கள் என் பாதையில் ஒரு குழியைத் தோண்டினார்கள்; அதற்குள் அவர்களே விழுந்து போனார்கள். 7 என் இருதயம் உறுதியாயிருக்கிறது, இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் இசையமைத்துப் பாடுவேன். 8 என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! நான் அதிகாலையில் விழித்தெழுவேன். 9 ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன். 10 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது. 11 இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References