தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், [QBR2] மனிதன் என்னை தாக்குகிறான்; [QBR2] நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான். [QBR]
2. என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்; [QBR2] அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள்.
3. நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். [QBR2]
4. நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; [QBR] அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். [QBR2] அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
5. எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; [QBR2] அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே. [QBR]
6. அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள், [QBR2] என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய் [QBR2] மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள். [QBR]
7. அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்; [QBR2] இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும்.
8. நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; [QBR2] என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; [QBR2] அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா? [QBR]
9. நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, [QBR2] என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; [QBR2] அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.
10. நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; [QBR2] யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன். [QBR]
11. நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; [QBR2] மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
12. இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; [QBR2] நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன். [QBR]
13. ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், [QBR2] என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்; [QBR] இதினால் நான் இறைவனுக்கு முன்பாக [QBR2] வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 56 / 150
சங்கீதம் 56:52
1 இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், மனிதன் என்னை தாக்குகிறான்; நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான். 2 என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்; அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள். 3 நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். 4 நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? 5 எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே. 6 அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள், என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய் மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள். 7 அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்; இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும். 8 நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா? 9 நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன். 10 நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன். 11 நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? 12 இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன். 13 ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்; இதினால் நான் இறைவனுக்கு முன்பாக வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 56 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References