தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், [QE][QS2]மனிதன் என்னை தாக்குகிறான்; [QE][QS2]நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான். [QE]
2. [QS]என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்; [QE][QS2]அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள். [QE][PBR]
3. [QS]நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். [QE]
[QS2]4. நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; [QE][QS]அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். [QE][QS2]அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? [QE][PBR]
5. [QS]எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; [QE][QS2]அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே. [QE]
6. [QS]அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள், [QE][QS2]என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய் [QE][QS2]மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள். [QE]
7. [QS]அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்; [QE][QS2]இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும். [QE][PBR]
8. [QS]நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; [QE][QS2]என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; [QE][QS2]அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா? [QE]
9. [QS]நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, [QE][QS2]என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; [QE][QS2]அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன். [QE][PBR]
10. [QS]நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; [QE][QS2]யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன். [QE]
11. [QS]நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; [QE][QS2]மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? [QE][PBR]
12. [QS]இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; [QE][QS2]நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன். [QE]
13. [QS]ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், [QE][QS2]என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்; [QE][QS]இதினால் நான் இறைவனுக்கு முன்பாக [QE][QS2]வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 56 / 150
1 இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், மனிதன் என்னை தாக்குகிறான்; நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான். 2 என் பகைவர்கள் நாள்தோறும் என்னை அழுத்துகிறார்கள்; அநேகர் தங்கள் பெருமையோடு என்னை எதிர்த்துப் போரிடுகிறார்கள். 3 நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். 4 நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? 5 எப்பொழுதும் அவர்கள் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; அவர்களின் திட்டங்கள் அனைத்தும் எனக்குத் தீமை செய்வதற்கே. 6 அவர்கள் ஒன்றுகூடி பதுங்கி இருக்கிறார்கள், என் உயிரைப் பறிக்க விருப்பம் உள்ளவர்களாய் மறைந்திருந்து என் காலடிகளைக் கவனிக்கிறார்கள். 7 அவர்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்களைத் தப்பவிடாதேயும்; இறைவனே, உமது கோபத்தில் மக்கள் கூட்டத்தைக் கீழே வீழ்த்திவிடும். 8 நீர் என் அலைச்சலை கணக்கில் வைத்திருக்கிறீர்; என் கண்ணீரை உமது தோற்குடுவையில் சேர்த்து வைத்திருக்கிறீர்; அவை உமது பதிவேட்டில் இருக்கிறது அல்லவா? 9 நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன். 10 நான் இறைவனுடைய வார்த்தையைப் புகழ்வேன்; யெகோவாவினுடைய வார்த்தையைப் புகழ்வேன். 11 நான் இறைவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்? 12 இறைவனே, நான் உமக்கு நேர்த்திக் கடன்களைச் செய்திருக்கிறேன்; நன்றிக் காணிக்கைகளை நான் உமக்குச் செலுத்துவேன். 13 ஏனெனில், நீர் என்னை மரணத்திலிருந்து மீட்டுக்கொண்டீர், என் கால்களை இடறாமல் காத்துக்கொண்டீர்; இதினால் நான் இறைவனுக்கு முன்பாக வாழ்வின் வெளிச்சத்தில் நடப்பேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 56 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References