1. [QS]இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; [QE][QS2]என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும். [QE]
[QS2]2. எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; [QE][QS]என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன். [QE]
[QS2]3. எதிரியின் வார்த்தையினாலும் [QE][QS2]கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்; [QE][QS]அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து, [QE][QS2]கோபத்தில் என்னை பகைக்கிறார்கள். [QE][PBR]
4. [QS]என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; [QE][QS2]மரணபயம் என்னைத் தாக்குகின்றன. [QE]
5. [QS]பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; [QE][QS2]பயங்கரம் என்னை மூடிக்கொண்டது. [QE]
6. [QS]நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! [QE][QS2]பறந்துபோய் இளைப்பாறுவேன். [QE]
7. [QS]நான் தொலைவில் தப்பிப்போய் [QE][QS2]பாலைவனத்தில் தங்குவேன். [QE]
8. [QS]கடும் காற்றுக்கும் புயலுக்கும் [QE][QS2]தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன். [QE][PBR]
9. [QS]யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, [QE][QS2]அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்; [QE][QS2]ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன். [QE]
10. [QS]அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; [QE][QS2]கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன. [QE]
11. [QS]பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது; [QE][QS2]அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. [QE][PBR]
12. [QS]என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; [QE][QS2]அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்; [QE][QS]எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால், [QE][QS2]நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன். [QE]
13. [QS]ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், [QE][QS2]எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே. [QE]
14. [QS]நாங்கள் ஒன்றுகூடி [QE][QS2]இனிய ஆலோசனைபண்ணி, [QE][QS]மக்கள் கூட்டத்துடன் [QE][QS2]இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம். [QE][PBR]
15. [QS]மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; [QE][QS2]தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், [QE][QS2]அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக. [QE][PBR]
16. [QS]நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS2]யெகோவா என்னைக் காப்பாற்றுவார். [QE]
17. [QS]மாலையிலும் காலையிலும் [QE][QS2]மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; [QE][QS2]அவர் என் குரலைக் கேட்பார். [QE]
18. [QS]பலர் என்னை எதிர்த்தபோதும், [QE][QS2]எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து [QE][QS2]அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார். [QE]
19. [QS]சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, [QE][QS2]அவர்களைத் தாழ்த்திவிடுவார்; [QE][QS]அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, [QE][QS2]ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை. [QE][PBR]
20. [QS]என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; [QE][QS2]அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான். [QE]
21. [QS]அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, [QE][QS2]ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; [QE][QS]அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, [QE][QS2]ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன. [QE][PBR]
22. [QS]உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; [QE][QS2]அவர் உங்களைத் தாங்குவார்; [QE][QS]நீதிமான்களை அவர் [QE][QS2]ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார். [QE]
23. [QS]ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை [QE][QS2]அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; [QE][QS]இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் [QE][QS2]தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள். [QE][PBR] [QS]ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன். [QE]