1. இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; [QBR2] என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும். [QBR2]
2. எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; [QBR] என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன். [QBR2]
3. எதிரியின் வார்த்தையினாலும் [QBR2] கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்; [QBR] அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து, [QBR2] கோபத்தில் என்னை பகைக்கிறார்கள்.
4. என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; [QBR2] மரணபயம் என்னைத் தாக்குகின்றன. [QBR]
5. பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; [QBR2] பயங்கரம் என்னை மூடிக்கொண்டது. [QBR]
6. நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! [QBR2] பறந்துபோய் இளைப்பாறுவேன். [QBR]
7. நான் தொலைவில் தப்பிப்போய் [QBR2] பாலைவனத்தில் தங்குவேன். [QBR]
8. கடும் காற்றுக்கும் புயலுக்கும் [QBR2] தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.
9. யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, [QBR2] அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்; [QBR2] ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன். [QBR]
10. அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; [QBR2] கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன. [QBR]
11. பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது; [QBR2] அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
12. என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; [QBR2] அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்; [QBR] எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால், [QBR2] நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன். [QBR]
13. ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், [QBR2] எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே. [QBR]
14. நாங்கள் ஒன்றுகூடி [QBR2] இனிய ஆலோசனைபண்ணி, [QBR] மக்கள் கூட்டத்துடன் [QBR2] இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.
15. மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; [QBR2] தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், [QBR2] அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக.
16. நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QBR2] யெகோவா என்னைக் காப்பாற்றுவார். [QBR]
17. மாலையிலும் காலையிலும் [QBR2] மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; [QBR2] அவர் என் குரலைக் கேட்பார். [QBR]
18. பலர் என்னை எதிர்த்தபோதும், [QBR2] எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து [QBR2] அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார். [QBR]
19. சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, [QBR2] அவர்களைத் தாழ்த்திவிடுவார்; [QBR] அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, [QBR2] ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை.
20. என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; [QBR2] அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான். [QBR]
21. அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, [QBR2] ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; [QBR] அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, [QBR2] ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன.
22. உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; [QBR2] அவர் உங்களைத் தாங்குவார்; [QBR] நீதிமான்களை அவர் [QBR2] ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார். [QBR]
23. ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை [QBR2] அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; [QBR] இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் [QBR2] தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன். [PE]