1. [QS]மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். [QE][QS2]அவர்கள் சீர்கெட்டவர்கள்; [QE][QS]அவர்களுடைய வழிகள் இழிவானவை; [QE][QS2]அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. [QE][PBR]
2. [QS]இறைவன் பரலோகத்திலிருந்து [QE][QS2]மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், [QE][QS]அவர்களில் விவேகமுள்ளவனாவது [QE][QS2]இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். [QE]
3. [QS]எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; [QE][QS2]நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, [QE][QS2]ஒருவனாகிலும் இல்லை. [QE][PBR]
4. [QS]தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? [QE][PBR] [QS]மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; [QE][QS2]அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை. [QE]
5. [QS]பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, [QE][QS2]அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். [QE][QS]உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; [QE][QS2]இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். [QE][PBR]
6. [QS]சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! [QE][QS2]இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, [QE][QS2]யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! [QE]