1. மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். [QBR2] அவர்கள் சீர்கெட்டவர்கள்; [QBR] அவர்களுடைய வழிகள் இழிவானவை; [QBR2] அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
2. இறைவன் பரலோகத்திலிருந்து [QBR2] மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், [QBR] அவர்களில் விவேகமுள்ளவனாவது [QBR2] இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். [QBR]
3. எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; [QBR2] நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, [QBR2] ஒருவனாகிலும் இல்லை.
4. தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; [QBR2] அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை. [QBR]
5. பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, [QBR2] அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். [QBR] உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; [QBR2] இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6. சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! [QBR2] இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, [QBR2] யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்! [PE]