1. [QS]இறைவனே, உமது அன்பின் நிமித்தம் [QE][QS2]எனக்கு இரக்கம் காட்டும், [QE][QS]உமது பெரிதான கருணையின் நிமித்தம் [QE][QS2]என் மீறுதல்களை நீக்கிவிடும். [QE]
2. [QS]என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி, [QE][QS2]என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும். [QE][PBR]
3. [QS]என் மீறுதல்களை நான் அறிவேன்; [QE][QS2]என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QE]
4. [QS]உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்; [QE][QS2]உமது பார்வையில் தீமையானதைச் செய்திருக்கிறேன்; [QE][QS]ஆதலால், உம்முடைய தீர்ப்பில் நீர் சரியானவர், [QE][QS2]உம்முடைய நியாய விசாரணையில் நீர் நீதியானவராயிருக்கிறீர். [QE]
5. [QS]நிச்சயமாகவே நான் பிறந்ததிலிருந்து பாவியாயிருக்கிறேன்; [QE][QS2]என் தாய் என்னைக் கர்ப்பந்தரித்ததில் இருந்தே நான் பாவியாய் இருக்கிறேன். [QE]
6. [QS]ஆனாலும், நான் கருப்பையிலிருந்தே உண்மையாயிருக்க நீர் விரும்புகிறீர்; [QE][QS2]அந்த மறைவான இடத்திலிருந்தே நீர் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். [QE][PBR]
7. [QS]ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; [QE][QS2]என்னைக் கழுவும், அப்பொழுது நான் வெண்பனியைப் பார்க்கிலும் வெண்மையாவேன். [QE]
8. [QS]நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்; [QE][QS2]நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூரட்டும். [QE]
9. [QS]என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து, [QE][QS2]என் எல்லா அநியாயத்தையும் நீக்கிவிடும். [QE][PBR]
10. [QS]இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, [QE][QS2]நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும். [QE]
11. [QS]உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம், [QE][QS2]உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். [QE]
12. [QS]உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்; [QE][QS2]விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும். [QE][PBR]
13. [QS]அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; [QE][QS2]பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள். [QE]
14. [QS]இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; [QE][QS2]நீர் என்னை இரட்சிக்கும் இறைவன். [QE][QS2]எனது நாவு உமது நீதியைப் பாடும். [QE]
15. [QS]யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; [QE][QS2]அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். [QE]
16. [QS]நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்; [QE][QS2]தகன காணிக்கையிலும் நீர் மகிழ்வதில்லை. [QE]
17. [QS]இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்; [QE][QS2]இறைவனே, குற்றத்தை உணர்ந்து உடைந்த இதயத்தை [QE][QS2]நீர் புறக்கணிக்கமாட்டீர். [QE][PBR]
18. [QS]உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்; [QE][QS2]எருசலேமின் மதில்களைக் கட்டும். [QE]
19. [QS]அப்பொழுது முழு தகன காணிக்கைகளிலும், [QE][QS2]சர்வாங்க தகன காணிக்கையான நீதி பலிகளிலும் நீர் மகிழ்ச்சியடைவீர்; [QE][QS2]உமது பலிபீடத்தின்மேல் காளைகளை அர்ப்பணிப்பார்கள். [QE]