1. இறைவனே, உமது அன்பின் நிமித்தம் [QBR2] எனக்கு இரக்கம் காட்டும், [QBR] உமது பெரிதான கருணையின் நிமித்தம் [QBR2] என் மீறுதல்களை நீக்கிவிடும். [QBR]
2. என் அநியாயங்கள் எல்லாவற்றையும் நீர் கழுவி, [QBR2] என் பாவத்திலிருந்து என்னைச் சுத்தமாக்கும்.
3. என் மீறுதல்களை நான் அறிவேன்; [QBR2] என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது. [QBR]
4. உமக்கு எதிராக, உமக்கு எதிராக மட்டுமே நான் பாவம் செய்தேன்; [QBR2] உமது பார்வையில் தீமையானதைச் செய்திருக்கிறேன்; [QBR] ஆதலால், உம்முடைய தீர்ப்பில் நீர் சரியானவர், [QBR2] உம்முடைய நியாய விசாரணையில் நீர் நீதியானவராயிருக்கிறீர். [QBR]
5. நிச்சயமாகவே நான் பிறந்ததிலிருந்து பாவியாயிருக்கிறேன்; [QBR2] என் தாய் என்னைக் கர்ப்பந்தரித்ததில் இருந்தே நான் பாவியாய் இருக்கிறேன். [QBR]
6. ஆனாலும், நான் கருப்பையிலிருந்தே உண்மையாயிருக்க நீர் விரும்புகிறீர்; [QBR2] அந்த மறைவான இடத்திலிருந்தே நீர் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
7. ஈசோப்புத் தளையினால் என்னைச் சுத்தப்படுத்தும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; [QBR2] என்னைக் கழுவும், அப்பொழுது நான் வெண்பனியைப் பார்க்கிலும் வெண்மையாவேன். [QBR]
8. நான் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கேட்கும்படிச் செய்யும்; [QBR2] நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூரட்டும். [QBR]
9. என் பாவங்களைக் காணாதபடி உமது முகத்தை மறைத்து, [QBR2] என் எல்லா அநியாயத்தையும் நீக்கிவிடும்.
10. இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, [QBR2] நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும். [QBR]
11. உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம், [QBR2] உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். [QBR]
12. உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்; [QBR2] விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும்.
13. அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; [QBR2] பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள். [QBR]
14. இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; [QBR2] நீர் என்னை இரட்சிக்கும் இறைவன். [QBR2] எனது நாவு உமது நீதியைப் பாடும். [QBR]
15. யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; [QBR2] அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். [QBR]
16. நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்; [QBR2] தகன காணிக்கையிலும் நீர் மகிழ்வதில்லை. [QBR]
17. இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்; [QBR2] இறைவனே, குற்றத்தை உணர்ந்து உடைந்த இதயத்தை [QBR2] நீர் புறக்கணிக்கமாட்டீர்.
18. உமது தயவின்படி சீயோனுக்கு நன்மை செய்யும்; [QBR2] எருசலேமின் மதில்களைக் கட்டும். [QBR]
19. அப்பொழுது முழு தகன காணிக்கைகளிலும், [QBR2] சர்வாங்க தகன காணிக்கையான நீதி பலிகளிலும் நீர் மகிழ்ச்சியடைவீர்; [QBR2] உமது பலிபீடத்தின்மேல் காளைகளை அர்ப்பணிப்பார்கள். [PE]