தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், [QBR2] என் பெருமூச்சைக் கவனியும். [QBR]
2. உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், [QBR2] என் அரசனே, என் இறைவனே, [QBR2] உம்மிடமே நான் வேண்டுகிறேன்.
3. யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; [QBR2] நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, [QBR2] எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன். [QBR]
4. நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; [QBR2] தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது. [QBR]
5. திமிர் பிடித்தவர்கள் [QBR2] உமது சமுகத்தில் நிற்கமுடியாது; [QBR] அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர். [QBR2]
6. பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; [QBR] இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும் [QBR2] யெகோவா அருவருக்கிறார். [QBR]
7. ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே [QBR2] உமது வீட்டிற்கு வந்து, [QBR] உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி [QBR2] பயபக்தியுடன் வணங்குவேன்.
8. யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் [QBR2] உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; [QBR2] உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும். [QBR]
9. அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; [QBR2] அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; [QBR] அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; [QBR2] அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். [QBR]
10. இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்; [QBR2] அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும். [QBR] அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்; [QBR2] ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள். [QBR]
11. ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்; [QBR2] அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்; [QBR] உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி, [QBR2] அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.
12. யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; [QBR2] ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 150
சங்கீதம் 5:81
1 யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் பெருமூச்சைக் கவனியும். 2 உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், என் அரசனே, என் இறைவனே, உம்மிடமே நான் வேண்டுகிறேன். 3 யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன். 4 நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது. 5 திமிர் பிடித்தவர்கள் உமது சமுகத்தில் நிற்கமுடியாது; அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர். 6 பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும் யெகோவா அருவருக்கிறார். 7 ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே உமது வீட்டிற்கு வந்து, உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி பயபக்தியுடன் வணங்குவேன். 8 யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும். 9 அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள். 10 இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்; அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும். அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்; ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள். 11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்; அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்; உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி, அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும். 12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References