தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், [QBR2] இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே, [QBR]
2. தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, [QBR2] எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்: [QBR]
3. என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; [QBR2] என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். [QBR]
4. நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; [QBR2] விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
5. தீங்கு நாட்கள் வரும்போதும், [QBR2] கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் [QBR2] நான் ஏன் பயப்படவேண்டும்? [QBR]
6. அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, [QBR2] தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள். [QBR]
7. ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; [QBR2] அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது. [QBR]
8. ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; [QBR2] எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது. [QBR]
9. அவர்கள் அழிவைக் காணாமல் [QBR2] என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது. [QBR]
10. ஞானிகள் சாவதையும், [QBR2] மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; [QBR2] அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம். [QBR]
11. தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், [QBR2] அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் [QBR2] முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
12. ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; [QBR2] அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
13. தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; [QBR2] இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே. [QBR]
14. அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; [QBR2] மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். [QBR2] நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; [QBR] அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், [QBR2] கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். [QBR]
15. ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; [QBR2] அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். [QBR]
16. பிறர் செல்வந்தர்களாகி, [QBR2] அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே; [QBR]
17. ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; [QBR2] அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது. [QBR]
18. அவர்கள் உயிரோடிருந்தபோது, [QBR2] தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். [QBR2] அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள். [QBR]
19. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; [QBR2] வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
20. செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் [QBR2] அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 49 / 150
சங்கீதம் 49:76
1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே, 2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்: 3 என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். 4 நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்: 5 தீங்கு நாட்கள் வரும்போதும், கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் நான் ஏன் பயப்படவேண்டும்? 6 அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள். 7 ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது. 8 ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது. 9 அவர்கள் அழிவைக் காணாமல் என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது. 10 ஞானிகள் சாவதையும், மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம். 11 தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும். 12 ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள். 13 தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே. 14 அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். 15 ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். 16 பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே; 17 ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது. 18 அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள். 19 ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள். 20 செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 49 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References