1. [QS]மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், [QE][QS2]இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே, [QE]
2. [QS]தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, [QE][QS2]எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்: [QE]
3. [QS]என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; [QE][QS2]என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். [QE]
4. [QS]நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; [QE][QS2]விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்: [QE][PBR]
5. [QS]தீங்கு நாட்கள் வரும்போதும், [QE][QS2]கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் [QE][QS2]நான் ஏன் பயப்படவேண்டும்? [QE]
6. [QS]அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, [QE][QS2]தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள். [QE]
7. [QS]ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; [QE][QS2]அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது. [QE]
8. [QS]ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; [QE][QS2]எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது. [QE]
9. [QS]அவர்கள் அழிவைக் காணாமல் [QE][QS2]என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது. [QE]
10. [QS]ஞானிகள் சாவதையும், [QE][QS2]மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; [QE][QS2]அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம். [QE]
11. [QS]தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், [QE][QS2]அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் [QE][QS2]முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும். [QE][PBR]
12. [QS]ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; [QE][QS2]அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள். [QE][PBR]
13. [QS]தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; [QE][QS2]இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே. [QE]
14. [QS]அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; [QE][QS2]மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். [QE][QS2]நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; [QE][QS]அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், [QE][QS2]கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். [QE]
15. [QS]ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; [QE][QS2]அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். [QE]
16. [QS]பிறர் செல்வந்தர்களாகி, [QE][QS2]அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே; [QE]
17. [QS]ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; [QE][QS2]அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது. [QE]
18. [QS]அவர்கள் உயிரோடிருந்தபோது, [QE][QS2]தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். [QE][QS2]அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள். [QE]
19. [QS]ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; [QE][QS2]வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள். [QE][PBR]
20. [QS]செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் [QE][QS2]அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள். [QE]