1. [QS]யெகோவா மிகவும் பெரியவர், [QE][QS2]நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் [QE][QS2]அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். [QE][PBR]
2. [QS]சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், [QE][QS2]முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, [QE][QS]வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது [QE][QS2]மகா அரசரின் நகரம். [QE]
3. [QS]இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, [QE][QS2]அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார். [QE][PBR]
4. [QS]அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து [QE][QS2]முன்னேறி வந்தபோது, [QE]
5. [QS]சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, [QE][QS2]திகிலடைந்து தப்பி ஓடினார்கள். [QE]
6. [QS]அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; [QE][QS2]பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது. [QE]
7. [QS]யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், [QE][QS2]தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர். [QE][PBR]
8. [QS]நாம் கேள்விப்பட்டது போலவே, [QE][QS2]சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், [QE][QS]நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் [QE][QS2]நாம் கண்டும் இருக்கிறோம்: [QE][QS]இறைவன் அந்தப் பட்டணத்திற்கு [QE][QS2]என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார். [QE][PBR]
9. [QS]இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, [QE][QS2]உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம். [QE]
10. [QS]இறைவனே, உமது பெயரைப் போலவே [QE][QS2]உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; [QE][QS2]உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. [QE]
11. [QS]உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் [QE][QS2]சீயோன் மலை களிகூருகிறது, [QE][QS2]யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது. [QE][PBR]
12. [QS]சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; [QE][QS2]அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள். [QE]
13. [QS]அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு [QE][QS2]நீங்கள் சொல்லும்படி, [QE][QS]அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; [QE][QS2]கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள். [QE][PBR]
14. [QS]ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; [QE][QS2]மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார். [QE]