தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவா மிகவும் பெரியவர், [QBR2] நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் [QBR2] அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2. சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், [QBR2] முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, [QBR] வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது [QBR2] மகா அரசரின் நகரம். [QBR]
3. இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, [QBR2] அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார்.
4. அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து [QBR2] முன்னேறி வந்தபோது, [QBR]
5. சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, [QBR2] திகிலடைந்து தப்பி ஓடினார்கள். [QBR]
6. அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; [QBR2] பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது. [QBR]
7. யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், [QBR2] தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர்.
8. நாம் கேள்விப்பட்டது போலவே, [QBR2] சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், [QBR] நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் [QBR2] நாம் கண்டும் இருக்கிறோம்: [QBR] இறைவன் அந்தப் பட்டணத்திற்கு [QBR2] என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார்.
9. இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, [QBR2] உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம். [QBR]
10. இறைவனே, உமது பெயரைப் போலவே [QBR2] உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; [QBR2] உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. [QBR]
11. உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் [QBR2] சீயோன் மலை களிகூருகிறது, [QBR2] யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.
12. சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; [QBR2] அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள். [QBR]
13. அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு [QBR2] நீங்கள் சொல்லும்படி, [QBR] அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; [QBR2] கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.
14. ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; [QBR2] மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 48 / 150
சங்கீதம் 48
1 யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 2 சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது மகா அரசரின் நகரம். 3 இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார். 4 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது, 5 சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து தப்பி ஓடினார்கள். 6 அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது. 7 யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர். 8 நாம் கேள்விப்பட்டது போலவே, சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் நாம் கண்டும் இருக்கிறோம்: இறைவன் அந்தப் பட்டணத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார். 9 இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம். 10 இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. 11 உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது. 12 சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள். 13 அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லும்படி, அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள். 14 ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 48 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References