1. [QS]நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்; [QE][QS2]மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள். [QE][PBR]
2. [QS]உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர், [QE][QS2]அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர். [QE]
3. [QS]அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார், [QE][QS2]மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார். [QE]
4. [QS]இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை, [QE][QS2]தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார். [QE][PBR]
5. [QS]இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; [QE][QS2]யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார். [QE]
6. [QS]இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்; [QE][QS2]நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள். [QE]
7. [QS]ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்; [QE][QS2]அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள். [QE][PBR]
8. [QS]இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்; [QE][QS2]அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். [QE]
9. [QS]மக்களின் தலைவர்கள், [QE][QS2]ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள். [QE][QS]ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்; [QE][QS2]அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். [QE]